ஐபிஎல் 2021: கொல்கத்தா அணியை வீழத்தியது சென்னை…!! கடைசி பந்தில் த்ரில் வெற்றி…!!!

Author: Udhayakumar Raman
26 September 2021, 8:03 pm
Quick Share

கொல்கத்தா-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிராவோ உடற்சோர்வின் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் சாம் கரன் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 8 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.மற்றொரு துவக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர்18 ரன்னில் தாகூரின் சாதாரண பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி வந்த திரிபாதி 45 ரன்னில் ஜடேஜாவின் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் பிறகு வந்த ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் ராணா ஆகியோர் ஓரளவு சிறப்பான பங்களிப்பை தர கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய சென்னை அணியின் துவக்கம் சிறப்பாக அமைந்தது. பவர் பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை குவித்தது. அபாயகரமாக ஆடிய இந்த ஜோடியை ஒருவழியாக அந்தரே ரசல் பிடித்தார். ருத்ராஜ் கெய்க்வாட் 40 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார்.டு பிளசிஸ் 43 ரன்களில் பிரதிஷ் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய மொயின் அலி 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் ரெய்னா 11 ரன்களில் ரன் அவுட்டாக ஆட்டத்தில் பரபரப்பு உண்டானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார். கடைசி 2 ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரதிஷ் கிருஷ்ணா 19வது ஜடேஜா 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரி விளாசி ஆட்டத்தை சென்னையின் பக்கம் கொண்டு வந்தார்.அருமையாக ஆடிய ஜடேஜா 9 பந்தில் 23 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.இதன் மூலம் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

Views: - 346

0

0