தோனிக்கு கொரோனா பரிசோதனை : சென்னை அணிக்கு Green Signal!!

20 August 2020, 12:55 pm
CSK Dhoni - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாளை துபாய் செல்கின்றனர்.

கொரோனாவால் எந்த சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. ஒரு சில நாடுகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தின. இந்த நிலையில் இந்தியாவலி ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

இதற்காக சென்னை அணி வீரர்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர். இதனால் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கொரோன நெகட்டிவ் வந்துள்ளது.

நாளை மதியம் 1.30 மணிக்கு சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 60 பேர் செல்கின்றனர். நேரடியாக துபாய் செல்லவிருக்கும் வீரர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் துபாயில் செய்யப்பட்டுள்ளது.

துபாய் செல்ல உள்ள அணியை சேர்ந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் அனைவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. மேலும் இன்று சேன்னை சேப்பாக்கத்தில் சென்னை அணி வீரர்கள் இறுதி நாள் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

Views: - 40

0

0