சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா : அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

28 August 2020, 6:07 pm
Dhoni - updatenews360
Quick Share

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்பட 13 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்.,19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21ம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியைச் சேர்ந்த வீரர் யார் என்ற விபரம் வெளியிடவில்லை.
இதைத் தொடர்ந்து, சென்னை அணியினரின் தனிமைப்படுத்தும் காலத்தை அணி நிர்வாகம் மேலும் நீட்டித்துள்ளது.

Views: - 38

0

0