சொன்னதை செய்து காட்டிய தோனி : ஐதராபாத்தை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதையில் சென்னை அணி..!

13 October 2020, 11:25 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், தொடக்க வீரராக டூபிளசிஸுடன் இளம் வீரர் சாம் கரண் இறக்கப்பட்டார். டூபிளசிஸ் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும், சாம் கரன் ஒரே ஓவரில் 20 ரன்களை (31) விளாசி அமர்க்களப்படுத்தினார். பின்னர், வந்த வாட்சன் (42), ராயுடு (41), தோனி (21), ஜடேஜா (25) ஆகியோர் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, முன்னணி வீரர்கள் சோபிக்க தவறினாலும், வில்லியம்சன் (57) மட்டும் ஒரு முனையில் வெற்றிக்காக போராடினார். இருப்பினும், சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சினால், 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், தொடர் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியது.இதுவரை சென்னை அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 49

0

0