வெளுத்து வாங்கிய சாம்சன் ‘சிக்ஸர்’ மழை : 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி..!

22 September 2020, 11:31 pm
Quick Share

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சார்ஜாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 32 பந்துகளில் (9 சிக்ஸர்) 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கேப்டன் ஸ்மித்தும் அதிரடி காட்டி ர்ன் விகிதத்தை குறையாமல் பார்த்துக் கொண்டார். அவரும் அரைசதம் கடந்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், இறுதியில் ஆர்ச்சர் ருத்ர தாண்டவம் ஆடினார். கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால், அந்த 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கு சுமாரான தொடக்கமே அமைந்தது. சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் இழந்த நிலையில், டூபிளசிஸ் மட்டும் நிலைத்து நின்று இறுதி வரை போராடினார். இறுதி ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி ஹாட்ரிக் சிக்ஸ் பறக்கவிட்டார். இருப்பினும், சென்னை அணியால் 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Views: - 8

0

0