சுழல்ஜாலத்தால் இங்கிலாந்தை மாயம் செய்த அஸ்வின்… இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு : அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன்!!

8 February 2021, 4:36 pm
ashwin -1 updatenews360 (2)
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னையில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, கேப்டன் ரூட் 218 ரன்களும், சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து வந்த புஜாரா (73), பண்ட் (91) சிறப்பாக ஆடி சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர். மண்ணின் மைந்தர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆபரமாக ஆட இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 85 ரன்கள் குவித்தார்.

241 ரன்கள் முன்னிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக, அஸ்வின் தனது சுழலில் மிரட்டினார். இதனால், முக்கிய விக்கெட்டுக்களை அவர் கைப்பற்றினார். இதன் காரணமாக 178 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூட் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். நதீம் 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி பேட் செய்த இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Views: - 0

0

0