காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி : கோபா அமெரிக்க தொடரில் 15வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா..!!

11 July 2021, 8:46 am
Argentina Champion- Updatenews360
Quick Share

தென் அமெரிக்க கால்பந்து அணிகளுக்கான 47வது கோபா அமெரிக்கா கால்வந்து தொடர் பிரேசில் நகரங்களல் நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் வென்று அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது.

22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடந்த கோபா அமெரிக்கா 2021 இன் இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தியதால் அர்ஜென்டினா இறுதியாக ஒரு கோப்பையைப் பெற்றுள்ளது.

இது 1993 முதல் அர்ஜென்டினாவின் முதல் சர்வதேச கோப்பையும் மற்றும் 15 வது கோபா அமெரிக்கா கோப்பையும் ஆகும்.

Views: - 362

0

0