இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி: 2 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்..!!

15 July 2021, 9:50 am
Quick Share

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

Indian Cricket Team - Updatenews360

இதன் காரணமாக, இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் இருவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு 10 நாள்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வீரருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து மற்றொரு வீரர் தன்னுடைய 10 நாள் தனிமைப்படுத்துதலை ஜூன் 18ம் தேதி நிறைவு செய்கிறார். அப்போது மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 357

0

0