ஐ.பி.எல்-லை சீர்குலைக்கும் கொரோனா : பிசிசிஐ மருத்துவருக்கும் தொற்று உறுதி..!

3 September 2020, 11:39 am
Quick Share

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்காக அமீரகம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக 6 நாள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், தொற்று ஏற்பட்ட 13 பேருக்கும் சிகிச்சை அளித்தவர் என கூறப்படுகிறது.

முழு பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் இருந்தும் மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரும் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த சூழலில், ஐ.பி.எஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் போட்டி நடக்குமா..? நடக்காதா..? என்ற எக்கத்துடன் கிரிக்கெட் ரசிகர்கள் நாட்களை கடத்தி வருகின்றனர்.

முன்னதாக கொரோனா அச்சம் இருந்தாலும் ஐ.பி.எல் டி 20 நடக்கும் என தோனி நம்பிக்கை அளித்து பேசியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரி ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0