‘காலம் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்’ : உருக்கமான டுவிட் போட்ட சச்சின்…!!

8 April 2021, 7:09 pm
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். இதையடுத்து, அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என தெரிய வந்தது. பின்னர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் நலம்பெறும் வேளையில் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கு நன்றி. என்னை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொண்டவர்கள் மற்றும் ஓய்வின்றி உழைக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0

Leave a Reply