சுழற்பந்து ஜாம்பவான் வார்னேவுக்கு கொரோனா : தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் மருத்துவர்கள்!!

Author: Udayachandran
2 August 2021, 2:04 pm
Warne Corona - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியா : முன்னாள் கிரிக்கெட் வீரர் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஷேன் வார்னேவின் பந்து வீச்சில் இந்திய அணி உட்பட பலமான அணிகளே அஞ்சும். அந்தளவுக்கு தனது சுழற்பந்து வீச்சால் எதிரணி திணற செய்பவர் ஷேன் வார்னே.

தற்போது 51 வயதாகும ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் என்னும் டி20 அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். அந்த அணியினருடன் பயிற்சியில் இருந்த அவருக்கு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர் பிசிஆர் பரிசசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

மேலும் அவருடன் இருந்த மற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Views: - 291

0

0