ரசிகர்களின்றி இன்று தொடங்குகிறது பன்டெஸ்லிகா கால்பந்து தொடர் : கோல் அடித்து விட்டு கொண்டாட தடை..!

16 May 2020, 11:34 am
football - updatenews360
Quick Share

ஜெர்மனி : கொரோனா அச்சுறுத்துக்கு மத்தியில் ரசிகர்கள் இல்லாமல் முதல்முறையாக ஜெர்மனியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் புகழ்பெற்ற கிளப் கால்பந்து போட்டி ஜெர்மனியில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், ஜெர்மனியில் பாதிப்பு சற்று தணிந்துள்ளது. இதனால், பன்டெஸ்லிகா போட்டியை நடத்த அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

கொரோனாவை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களோடு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் உலகில், தற்போது நடத்தப்படும் இந்த மிகப்பெரிய கால்பந்து தொடர் ரசிகர்களின் மனநிலையை சற்று மாற்றுவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் மொத்தம் 18 அணிகள் , ஒவ்வொரு அணியுடன் தலா 2 முறை மோதும். புதிய போட்டி அட்டவணைப்படி அடுத்த மாதம் 27-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கும். இந்த போட்டியில் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, 5 மாற்று ஆட்டக்காரர்கள் வரை பயன்படுத்தப்பட உள்ளனர்.

வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், நடுவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், கோல் அடித்தால் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவும், கட்டிப்பிடித்து கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply