கொரோனாவுக்கு மத்தியில் பயிற்சியை தொடங்கும் அணி : விரைவில் டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது..!

15 May 2020, 2:29 pm
Cricket - updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக், கிரிக்கெட், டென்னிஸ், ஆக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் உலகம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நாடுகளும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தடையை நீட்டித்துக் கொண்டுள்ளன.

அந்த வகையில், இங்கிலாந்தில் ஜுலை 1-ம் தேதி வரையில் தொழில்முறையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதனால், இங்கிலாந்தில் நடக்கவிருந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜுன் 1ம் தேதி முதல் இங்கிலாந்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கான அனுமதி படிப்படியாக வழங்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் எனவும், வீடுகளில் இருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் மக்களின் மனநிலையிலும், அரசின் நிதி சிக்கலிலும் சற்று மாற்றம் நிகழும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்குத் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை தொடங்கும் வீரர்கள், பின்னர், முழு வலைப்பயிற்சியில் இருவாரங்களுக்கு பிறகு ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply