கொரோனாவுக்கு பலியான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் : பிரபலங்கள் இரங்கல்..!

29 June 2020, 7:14 pm
Cricket - updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி மாநில கிரிக்கெட் வீரரும், 23 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி மாநில அணியின் சப்போர்ட் ஸ்டாஃபாகவும் இருந்த சஞ்சய் தோபால், கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

53 வயதான இவர், நோய் தொற்றுடன் பஹதுர்காரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெல்லி வீரர்கள் சேவாக், கம்பீர், மிதுன் மன்ஹாஸ் ஆகியோருக்கு நெருக்கமான நபராக இருந்து வந்தார் சஞ்சய் தோபால். இவரது மறைவுக்கு முன்னாள், இன்னாள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply