கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு

27 May 2021, 5:16 pm
Quick Share

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட 8 அணிகள் பங்பேற்கும் 5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4ம் தேதி முதல் ஜுலை 4-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகள் அனைத்தும் நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு அதிரித்து வரும் நிலையில், இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 471

0

0