பாட்டுப்பாடக்கூடாது, கோஷமிட கூடாது… முகக்கவசம் கட்டாயம்: டோக்கியோ ஒலிம்பிக் கெடுபிடிகள்..!

3 February 2021, 4:31 pm
tokyo olympic - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அதிகாரிகள் சாப்பிடும் மற்றும் தூங்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் விதிமுறைகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் அரசு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணைந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 2021 ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்தது. இதற்கிடையில் தற்போது வைரஸ் பரவும் வேகம் குறையாத காரணத்தினால் ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் பெற்றவர்களுக்கு மீண்டும் அந்த தொகையைத் திரும்பக் கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், அதிகாரிகள் என யாரும் அனுமதி இல்லாமல் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் சாப்பிடும் மற்றும் தூங்கும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக இந்த ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது ப்ளேபுக் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஒலிம்பிக்கில் இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தப் பாட்டுப்பாடவோ அல்லது கோஷமிடவோ கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மோரி ஒலிம்பிக்கை ஏற்பாடு செய்யும் குழுவினரை மேலும் ஒரு

Views: - 18

0

0