காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டும் சேர்ப்பு : மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

19 November 2020, 12:47 pm
commonwealth - cricket - updatenews360
Quick Share

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதன்பிறகு, நடந்த நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது. இருப்பினும், கிரிக்கெட் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன.

womens t20 world cup - updatenews360

இந்த நிலையில், 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து உள்பட ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். எஞ்சிய ஒரு அணி, தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு முன்னதாக தகுதி சுற்று போட்டி நடத்தப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Views: - 24

0

0