ஐபிஎல்: விளம்பரங்களில் ஆஸி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

22 February 2021, 10:33 pm
Quick Share

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை அந்த கிரிக்கெட் போர்டு விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பெட்டிங்கை ஊக்கப்படுத்தும் விளம்பரங்கள், பாஸ்ட்புட், மதுபானம் மற்றும் புகையிலை விளம்பரங்களில் நடிப்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன் உள்ளிட்ட பலர் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா பிசிசிஐக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் அணியின் முழு புகைப்படம் அந்த சம்பந்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தொடர்பான இந்தியாவில் வெளியாகும் பத்திரிகைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி மதுபானம், ஃபாஸ்ட்ஃபுட் அல்லது ஃபாஸ்ட்ஃபுட் ரெஸ்டாரண்ட் புகையிலை மற்றும் மதுபானம் சம்பந்தப்பட்டவற்றை ஊக்கப்படுத்தும் விதமாகப் பயன்படுத்தக்கூடாது. இதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களும் டிவி, ரேடியோ, பத்திரிக்கை மற்றும் இணையதளம் போன்ற விளம்பர விற்பனைகளை ஊக்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், நாதன் கூல்டர் நைல், கிளன் மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன், ஜாஸ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், கிறிஸ் லின், ஆடம் ஜாம்பா, ஜாஸ் பிலிப், ஆண்ரே டை டேவிட் வார்னர், மிட்சல் மார்ஸ் உள்ளிட்ட 19 வீரர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது

Views: - 1

0

0