கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவலைக்கிடம்
15 August 2020, 8:31 pmஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். காவலர்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்கள் உள்ளிடோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 12ம் தேதி சேட்டன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஒரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இன்று சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வீரர் சேட்டன் சவுகான், இந்திய அணிக்காக 73 டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில், கவாஸ்கருடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.