சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி…!

15 August 2020, 8:12 pm
Dhoni - world cup - updatenews360
Quick Share

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதற்கு பிறகு இந்திய அணிக்காக தோனி விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, தோனியின் ஓய்வு குறித்து மூத்த வீரர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸினால் உலகக்கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், தோனி அடுத்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா..? என்ற கேள்விக்குறி எழுந்தது.

தோனியின் தலைமையில்தான் இந்திய அணி ஐசிசியின் 3 உலகக்கோப்பைகளையும் இந்தியா வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 59

0

0