பந்தை எறிந்து வம்புக்கு இழுத்த இங்கிலாந்து ரசிகர்கள் : சபாஷ்…. சரியான பதிலடி கொடுத்த சிராஜ்… (வைரல் வீடியோ)

Author: Babu Lakshmanan
26 August 2021, 1:09 pm
siraj - updatenews360
Quick Share

பீல்டிங் செய்யும் போது பந்தை எறிந்து சண்டைக்கு இழுத்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்திய வீரர் சிராஜ் சைகையின் மூலம் பதிலடி கொடுத்தது இந்திய ரசிகர்களிடையே உற்சாகமூட்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது இதில், டாஸ் வென்ற இந்திய அணி, சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வெறும் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி விளையாடும்போது, பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பந்தை எறிந்து வம்புக்கு இழுத்தனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் சிராஜ் நாங்கள் இந்த டெஸ்ட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதாக சைகையில் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Views: - 384

0

0