மகள் பெயரில் இருந்து முகமது சமியின் பெயரைத் தூக்கிய மனைவி ஹசின் ஜஹான்!

2 February 2021, 8:45 pm
shami wife - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சாமியிடம் இருந்து விலகிய மனைவி ஹசின் ஜஹான், தனது மகளின் பின்னால் சமியின் பெயரைத் தூக்கி விட்டு தனது பெயரை இணைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. இவரின் மனைவி ஜஹான் அவருக்கு எதிராகக் கடந்த 2018 இல் பல அடுக்கடுக்கான பாலியல் புகார்களை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த புகார்கள் மட்டுமில்லாமல் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், சமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஜஹான் வெளியிட்டார்.

மேலும் சமிக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் ஜஹான். இந்த புகாரை அடுத்து சமியின் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துக் கொள்ளவும் தயாரானது. ஆனால் பின்னர் நிலைமை சரியானதையடுத்து தொடர்ந்து சமி ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதேபோல மேட்ச் பிக்சிங் ஈடுபடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போதும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி திகழ்கிறார்.

கிரிக்கெட் களத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வந்துள்ள சமி, சொந்த வாழ்க்கையில் தனது மனைவியிடம் இருந்து தற்போது வரை பிரிந்தே உள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி ஜஹான் அவரின் மகள் ஆயிராவின் பெயருக்குப் பின்னால் முகமது சமியின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயரை அவருடன் இணைத்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமியின் மகனான ஆயிரா புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜஹான், ஆயிரா ஜஹான் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரின் போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போதைய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து சமி ஓரங்கட்டப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சமி இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக சமி முழு உடற்தகுதி பெற்று மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0