ஜூவாண்டஸ் அணியை விட்டு வெளியேறுகிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ!

13 May 2021, 5:04 pm
Quick Share

அடுத்தாண்டு சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதிபெற ஜுவாண்டஸ் அணி தவறினால் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த அணியை விட்டு வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தாலின் மிகப்பெரிய அணிகளில் ஒரு அணியான ஜூவாண்டஸ் அணி தற்போது சீரி ஏ புள்ளிப்பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இண்டர் மிலன் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த பின் இந்தாண்டு முதல் 4 இடத்திற்குள் நுழைய தவறியது. ஒருவேளை இந்தாண்டு ஜூவாண்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் தகுதிபெற தவறினால் அந்த அணியில் உள்ள முன்னணி வீரர்கள் அணியில் இருந்து வெளியேறுவார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வேறு புதிய சவால்களுக்கு தயாராவதாக இத்தாலியின் பிரபல் செய்தியாளர் பேபினோ தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சுமார் 30 மில்லியன் யூரோக்களை ஜூவாண்டஸ் அணியிடம் இருந்து சம்பளமாக பெற்ற ரொனால்டோவிற்கு புதிய அணி இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து இவரை ஒப்பந்தம் செய்யுமா என்பது மற்றொருபுறம் கேள்வியாகவே உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் சாம்பியன் அணியான ஜூவாண்டஸ் அணியுடன் இணைந்தார் ரொனால்டோ. நீண்ட காலமாக சாம்பியன்ஷிப் லீக் தொடரின் கோப்பையை ஜூவாண்டஸ் அணி துரத்தி வருகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை கொடுத்து ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது. ஆனால் அவரின் வருகையும் ஜூவாண்டஸ் அணிக்கு இனிப்பாக இல்லை. சாம்பியன்ஸ் லீக் கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் ஜூவாண்டஸ் அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இது நான்காவது இடத்தில் உள்ள நாபோலி அணியை விட இரண்டு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது ஜூவாண்டஸ் அணி. இந்நிலையில் அடுத்ததாக பங்கேற்கவுள்ள இரண்டு போட்டிகளும் டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகள் இன்டர் மிலன் மற்றும் அட்லாண்டா என முன்னணி அணியை ஜுவாண்டஸ் அணி எதிர்கொள்ளவுள்ளதால், இந்த சீசனில் இதுதான் மிகவும் கடினமான போட்டியாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் இந்த முறையும் ஜுவான்டஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம் என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Views: - 351

0

0