கெய்க்வட், டுபிளசி அரைசதம்… சென்னை அபார வெற்றி: சரண்டரான ஹைதராபாத்!

28 April 2021, 11:04 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தற்போது நடக்கிறது. டெல்லியில் நடக்கும் இன்றைய 23வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

வார்னர் அரைசதம்
இதையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் (57) மற்றும் மணீஷ் பாண்டே (61) ஆகியோர் அரைசதம் கடந்து மிரட்டினர். கடைசி நேரத்தில் கேன் வில்லியம்சன் அதிரடியாக 10 பந்தில் 26 ரன்கள் அடித்து கைகொடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் லுங்கி நிகிடி அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

மிரட்டல் துவக்கம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ், ஃபாப் டுபிளசி ஆகியோர் துவக்கம் அளித்தனர். ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி ஹைதராபாத் பந்துவீச்சை மிகச்சுலபமாக சமாளித்தது. முதலில் டூபிளசி அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடர்ந்து மிடில் ஓவர்களில் கெய்க்வட் அதிரடிக்கு மாறினார்.

இதனால் மாறி மாறி இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஹைதராபாத் பவுலர்கள் திணறினர். இதற்கிடையில் 32 பந்தில் டுபிளசி அரைசதம் கடந்தார். அதுவரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வட் தொடர்ந்து ஹைதராபாத் வீரர் ஜகதீசா வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார்.

ரசித் இரட்டை அடி
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடு 129 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வர் 75 ரன்கள் அடித்து ரசித் கான் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மொயின் அலி 8 பந்தில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் அடித்து ரசித் கான் சுழலில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே டுபிளசி (56) அவுட்டானார். தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா இணைந்தனர்.

இதையடுத்து சென்னை அணி 4 ஓவரில் 22 ரன்கள் என்ற நிலையை எட்டியது. இதனால் இருவரும் நிதானமாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஜடேஜா கிடைத்த கேப்பில் பவுண்டரிகள் விளாசவும் தவறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Views: - 277

0

0