ரெய்னாவைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் அணியில் இருந்து விலகல் : சமாளிப்பாரா தோனி…?

4 September 2020, 3:28 pm
ms-dhoni-csk - updatenews360
Quick Share

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்காக கொரோனா வைரஸிடம் சிக்காமல், மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தொடரில் பங்கேற்க அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டுள்ளன. அனைத்து அணியின் வீரர்களும் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பிறகு, பயிற்சிகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் துவண்டு போயுள்ள சென்னை அணிக்கு, சொந்த காரணத்தினால் இந்தத் தொடரில் இருந்து ரெய்னா விலகியது பெரும் பின்னடைவாக உள்ளது.

harbajan slame - updatenews360

இந்த நிலையில், சென்னை அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஹர்பஜன் சிங்கும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் விலகினாலும் கூட அவருக்கு பதிலாக பியூஷ் சாவ்லா, சான்ட்னர், இம்ரான் தஹீர் உள்ளிட்டோர் கைகொடுக்க உள்ளனர்.

ஹர்பஜனின் விலகல் அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும், மன ரீதியாக வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பை உருவாக்கும் எனத் தெரிகிறது. எனவே, கொரோனா பாதிப்பு, வீரர்கள் விலகல் போன்றவற்றை சமாளித்து, இந்த முறையும் கோப்பையை நோக்கி அணியை கேப்டன் தோனி வழிநடத்தி செல்வாரா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Views: - 6

0

0