பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ஜெர்சியை உருவாக்கிய சிஎஸ்கே!!

Author: Udhayakumar Raman
25 March 2021, 5:30 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி சுமார் 15 பிளாஸ்டிக் பாட்டிகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான ஜெர்சியை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதை வெளியிட்டுள்ளார். இந்த ஜெர்சியை சுமார் 15 பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்தியாவில் இந்த ஆண்டு 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னதாகவே பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து வீரர்களுக்கான பயிற்சியை தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமீபத்தில் தங்கள் அணி புதிதாக அணிந்து விளையாட உள்ள ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

இதில் கேப்டன் தோனிக்கு மிகவும் பிடித்தமான ராணுவ கலவையும் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில் இந்த ஜெர்சி குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். இந்த ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் 15 பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ஒரு ஜெர்சியை உருவாக்கியுள்ளது. பாலிஸ்டர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியை தயாரிக்க 90 சதவீதம் குறைவான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்பன் வெளியீடும் 270 கிராம் என்ற அளவில் கொண்டு இந்த சிறப்பான ஜெர்சி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ரசிகர்களுக்கு ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் தான்: மீண்டும் இந்தியா-பாக் மோதல் ஆரம்பம்!

இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் விளையாடத் தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது. கடந்தாண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் வெறும் 6 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து ஏழாவது இடம் பிடித்தது. இந்நிலையில் இந்த சிக்கல்களை இந்த ஆண்டு தவிர்ப்பதற்காகக் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் இணைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ரெய்னா. இவரின் வருகை இந்த முறை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 77

1

0