Yes சொல்லும் ராஜஸ்தான் ராயல்ஸ் …! N0 சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் ..! எதற்கு தெரியுமா..?

13 May 2020, 2:22 pm
CSK - RR - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்., 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் தாக்கத்தினால், தற்போது தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தே ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்குமா…? நடக்காதா..? என்பது குறித்து முடிவு செய்ய முடியும். இதனிடையே, ஐபிஎல் 2020 ரத்து செய்யப்பட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும் என பிசிசிஐ முதல்முறையாக நிதி பற்றி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்திய வீரர்களை மட்டுமே கொண்டு நடத்தலாம் என பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் யோசனை தெரிவித்துள்ளது

இந்த நிலையில், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல்லை நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை காண முடியாது. அப்படி, இந்திய வீரர்களை வைத்து மட்டும் விளையாடினால், இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் போலத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளது.

Leave a Reply