ராணுவத்திற்கு மரியாதை: புது ஜெர்சியை அறிமுகம் செய்த ‘தல’ தோனி!

25 March 2021, 1:17 pm
Quick Share

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி, தாங்கள் அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் படுசொதப்பு சொதப்பி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியும் கோப்பை வெல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் சிஎஸ்கே முன்னதாகவே தங்களின் பயிற்சி முகாமை துவங்கியது. இதற்கிடையில் தற்போது இந்தாண்டு தாங்கள் அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த பயிற்சி முகாமில் முதல் நாளில் இருந்து கேப்டன் தோனி இதில் பங்கேற்று வருகிறார். சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இந்த ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் தற்போது மும்பைக்குப் பயிற்சி முகாம் மாற்றப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி சிஎஸ்கேவின் பயிற்சி துவங்கவுள்ளதாகக் காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த முகாமில் பங்கேற்க சுரேஷ் ரெய்னா ஏற்கனவே மும்பை சென்றடைந்துள்ளார்.

ராணுவத்திற்கு மரியாதை

இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ள சிஎஸ்கே ஜெர்சி வழக்கமான மஞ்சள் மற்றும் நீள நிறத்தில் உள்ளது. கூடுதலாக இந்திய ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தோள் பட்டைப்பகுதியில் பச்சை நிறத்தில் ராணுவ உடையின் உருமறைப்பு அம்சம் கொண்ட வடிவமும் சேர்க்கப்பட்டுள்ளது. தவிர, வழக்கமான சிஎஸ்கேவின் அடையாளமான சிங்கத்தின் உருவமும், அதற்கு மேல் மூன்று முறை சாம்பியன் என்பதைக் குறிக்கும் விதமாக மூன்று நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.

Views: - 46

0

0