ஐபிஎல்லில் 386 ஓவர்கள் வீசியும் ஒரு No ball கூட போட்டது இல்ல : யார் இந்த சிஎஸ்கே வீரர் தெரியுமா..?

20 May 2020, 1:47 pm
Chennai-Super-Kings-CSK-Strengths-and-Weakness-for-IPL-2020-800x445
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் யாரும் எளிதில் செய்துவிட முடியாத சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என கனவு காணும் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, பின்னர் இந்திய அணியில் கால்பதித்த வீரர்கள் தற்போது எக்கச்சக்கமாக ஆகிவிட்டனர்.

அப்படிபட்ட ஐபிஎல் கிரிக்கெட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத அரிய சாதனையை சென்னையை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பியூஷ் சாவ்லா படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக முதலில் விளையாடினார். இதைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியால் 2014-ம் ஆண்டு ஏலம் எடுக்கப்பட்டார். தொடர்ந்து, அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த சாவ்லா, தனது ஐபிஎல் வரலாற்றில் 2016-ம் ஆண்டு முதல் நோ பாலை வீசினார்.

அதுவரை 8 ஆண்டுகளாக மொத்தம் 386 ஓவர்களை வீசியுள்ள அவர் ஒரு நோ – பாலையும் வீசாமல் இருந்து வந்துள்ளார். அவரது இந்த சாதனையை முறியடிப்பது எளிதான காரியமல்ல.

தற்போது, நடப்பு சீசனில் பியூஷ் சாவ்லா ரூ.6.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதோடு, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் சாவ்லா 4-வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply