‘ரகிட ரகிட ரகிட ஊஊ…’ தனுஷின் பாடலுக்கு நடனமாடிய சி.எஸ்.கே. வீரர்கள் : வைரலாகும் வீடியோ..!
1 August 2020, 4:49 pmகொரோனாவினால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செ.,19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்க இருக்கிறது. இதற்காக, நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனிடையே, கொரோனாவினால் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்லை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், தங்களது அணி வீரர்களின் செயல்களை வித்தியாசமாகவும், ரசிகர்களுக்கு பிடித்தது போல சமூக வலைதளங்களில் பதிவிடும் சென்னை சூபபர் கிங்ஸ் அணி, நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள தனுஷின் ஜகமே தந்திரம் என்னும் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு வீரர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
0
0