சின்ன தல ரெய்னாவை தக்க வைத்த சிஎஸ்கே: மீண்டும் தோனி கேப்டன்: ஜாதவ், விஜய், சாவ்லா நீக்கம்!

20 January 2021, 6:39 pm
Quick Share

வரும் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் யுஏஇயில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வரும் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கு முன்பாக இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று கடைசி தேதியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இதில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே நேரம் ஹர்பஜன் சிங் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் சொதப்பிய கேதர் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த அணியின் சுரேஷ் ரெய்னா திடீரென்று விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் இதற்குச் சொந்த காரணம் என அறிவிக்கப்பட்ட போதும் சில விவகாரங்கள் தான் ரெய்னா விலகலுக்குக் காரணம் என்ற பேச்சு அடிபட்டது. இதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா நீடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவியது.

கடந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இல்லாததால் அந்த அணி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கண்கூடாகத் தெரிந்தது. ரெய்னா விலகிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசன், “இந்த தொடரில் பங்கேற்காததால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய தொகையை இழக்கப் போகிறார்” என்றார். ஆனால் அணி தோல்வியை நோக்கிச் சென்ற போது சீனிவாசன் கண்டிப்பாக சீனியர் வீரர்களுக்குப் பக்கபலமாக இருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான தளத்தை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெய்னா சென்னை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு இந்த தொடரைத் தவறவிட்ட போதும் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார். இதற்கிடையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்த போதும் படுமோசமாகச் சுரப்பியாகும் மற்றும் முரளி விஜய் ஆகிய வரை அந்த அணி நிர்வாகம் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ 6.25 கோடிக்கு எடுக்கப்பட்ட ப்யூஸ் சாவ்லாவையும் விடுவித்துள்ளதாகச் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள ஏலத்திற்கு முன்பாக சென்னை அணி மிகக் குறுகிய தொகையைக் கைவசம் கொண்டுள்ளது. தற்போது கேதர் ஜாதவ், முரளி விஜய், ப்யூஸ் சாவ்லா விடுவிப்பு, ஹர்பஜன்சிங் ஒப்பந்த முடிவும் மற்றும் வாட்சனின் ஓய்வு என அந்த அணி தற்போது 22.7 கோடியைத் தனது பாக்கெட்டில் வைத்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு சரிவில் இருந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதே போல தோனி சென்னை அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0