ஜனதா Curfewவின் பொழுது தோனியும் தனது மகளும் வெளியிட்ட கியூட்டான வீடியோ…!

22 March 2020, 3:12 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸால் 260 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் இறந்துள்ளனர். இரண்டாம் கட்ட பாதிப்பில் இருக்கும் இந்தியா மூன்றாம் கட்டத்திற்கு செல்லகூடாதென்பதற்காக இந்திய அரசு இன்று காலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை யாரும் வெளியே செல்லகூடாதென்னும் விதியை “ஜனதா Curfew” என்னும் பெயரில் அனைவரையும் பின் பற்ற வலியுறுத்தினார்.


இந்நிலையில் நீண்ட நாட்களாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத மகேந்திர சிங் தோனி, இந்த
ஜனதா Curfew நேரத்தின் பொழுது தனது மகள் Ziva தோனியுடன் இணைந்து ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இருவரும் அமைதியாக இருந்துகொண்டு தலையை அசைக்கின்றனர். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றன.


இந்திய கிரிக்கெட் வரலாற்றின் கடைசி பதினைந்து ஆண்டுகளில் அதிகம் ஒலித்த பெயர் மகேந்திர சிங் தோனி. ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக விளையாடியவர். இவர் கடந்த ஆண்டு நடந்த ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியின் தோல்விக்கு பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply