வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநரானார் டேரன் சமி…!!

Author: Babu Lakshmanan
23 June 2021, 3:39 pm
sammy - updatenews360
Quick Share

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறந்த ஆல் ரவுண்டராகவும், நீண்ட கால கேப்டனாகவும் இருந்தவர் டேரன் சமி. இவர் தலைமையில் கடந்த 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பையை வென்றது.

இவர் கடைசியாக 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். 37 வயதான அவர் 38 டெஸ்ட்டுகள், 126 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறுகையில், ” வெஸ்ட் இண்டீஸ்ஸ கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளில் டேரன் சமியின் யோசனைகள் மிகவும் உதவுயாக இருக்கம். சரியான கேள்விகளை அவர் எழுப்ப வேண்டும்,” எனக் கூறினர்.

Views: - 396

0

0