‘தல’ தோனியின் சாதனையை தகர்த்த டேவிட் வார்னர்!

14 April 2021, 11:54 pm
Quick Share

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் தோனியின் சாதனையை சன்ரைசர்ஸ் வீரர் டேவிட் வார்னர் தகர்த்தார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையில் நடந்த இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் திரும்பினார்.

மேக்ஸ்வெல் ஆறுதல்
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் கோலி, படிக்கல் துவக்கம் அளித்தனர். இதில் படிக்கல் (11), கோலி (33) ஓரளவு கைகொடுத்தனர். மேக்ஸ்வெல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுமார் 5 ஆண்டுக்கு பின் அரைசதத்தை கடந்து கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் அடித்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வார்னர் சாதனை
இந்த போட்டியில் 54 ரன்கள் விளாசிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக அனைத்து விதமான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை (833 ரன்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார்.

ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்
877 டேவிட் வார்னர் *
833 தோனி
755 சுரேஷ் ரெய்னா
716 ரோகித் சர்மா
713 கௌதம் காம்பீர்

Views: - 22

0

0