மும்பையைப் பழிக்குப்பழி தீர்க்க காத்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ்… இன்று டெல்லி – மும்பை மோதல்!

20 April 2021, 1:18 pm
Quick Share

கடந்தாண்டு பைனல் போட்டியில் மும்பை அணியிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி பதிலடி கொடுக்க இன்று தயாராக உள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் மும்பை அணி ஏற்கனவே 3 போட்டிகளில் பங்கேற்று உள்ளது. டெல்லி அணி இந்த ஆடுகளத்தில் முதல்முறையாகக் களமிறங்க உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெறுவதைத் தவிர்த்துக் கடந்த ஆண்டு பைனல் போட்டியில் மும்பை அணியிடம் அடைந்த தோல்விக்குப் பழி வாங்கும் களமாகவே டெல்லி அணிக்குத் திகழ்கிறது. மேலும் கடந்த ஆண்டு நடந்த மும்பை டெல்லி அணிகள் மோதிய 4 போட்டியிலும் மும்பை அணியின் கையே மேலோங்கியது. இது டெல்லி அணியின் ஈகோவை தூண்டும் விதமாகவும் தன்னம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகவும் அமைந்தது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றி உற்சாகத்துடன் டெல்லி அணி இன்று களமிறங்க உள்ளது. மும்பை அணி ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளில் விளையாடி உள்ளதால் இங்கு உள்ள நுணுக்கங்களை ஏற்கனவே கற்றுத் தெரிந்து உள்ளது. இதற்கு முன்பாக மும்பை வான்கடே மைதானத்தில் மிகப் பெரிய இலக்குகளை எளிதாக எட்டிய டெல்லி அணி சேப்பாக்கம் மைதானத்தில் சற்று தடுமாற்றத்தைக் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மும்பை அணியைப் பொறுத்தவரையில் சென்னை ஆடுகளுக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆடுகளத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மேலும் 150 ரன்களுக்கு குறைவாக எடுத்த 2 போட்டிகளிலும் மும்பை அணி வெற்றிகரமாக எதிரணியை இலக்கை எட்டவிடாமல் வெற்றியை நோக்கி வசமாக்கி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் டெல்லி அணிக்கு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது எனலாம்.

இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி, மும்பை அணிகள் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 வெற்றிகளும், டெல்லி அணி 12 வெற்றிகளும் பெற்றுள்ளது.

Views: - 133

0

0