‘யப்பா…. ரங்கன் வாத்தியார மிஞ்சிட்டாரே’… தங்கம் வென்ற 20 வயது இளம் வீராங்கனை… பயிற்சியாளரின் ஆனந்த கூச்சல்…!! (வீடியோ)

Author: Babu
26 July 2021, 7:36 pm
swimming - updatenews360
Quick Share

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இளம் வீராங்கனை தங்கம் வென்றதை, அவரது பயிற்சியாளர் கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியான 400 மீட்டர் பரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 5 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கேட்டி லெடெக் அமெரிக்கா சார்பில் இந்த தடவையும் கலந்து கொண்டார். அவருடன் வெறும் 20 வயதே ஆன இளம் ஆஸ்திரேலியா வீராங்கனை அரியார்ன் பங்கேற்றார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அனுபவ வீராங்கனை லெடெக்கை பின்னுக்கு தள்ளி, இளம் வீராங்கனை அரியார்ன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இதனால் உற்சாகமடைந்த அரியார்னின் பயிற்சியாளர் டீன் பாக்ஸல், தனது முகக்கவசத்தை கழற்றி, முஷ்டியை முறுக்கி ஆனந்த கூச்சலிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 255

0

0