கேப்டனான மாயங்க் அகர்வால்… டெல்லி அணி பீல்டிங்!

2 May 2021, 7:28 pm
Quick Share

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிகோலஸ் பூரானிக்கு பதிலாக இங்கிலாந்தின் தாவித் மலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். அதேபோல மாயங்க் அகர்வாலும் அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை.

அணி விவரம்

பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், மாயங்க் அகர்வால் (கே), கிறிஸ் கெயில், தாவித் மலான், தீபக் கூடா, ஷாருக் கான், ஹர்பிரீத் பரார், கிறிஸ் ஜார்டன், ரிலே மெரிடித், ரவி பிஸ்னோ, முகமது ஷமி.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட் (கே), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரன் ஹெட்மயர், ஸ்டீவ் ஸ்மித், அக்‌ஷர் படேல், லலித் யாதவ், காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான்.

Views: - 129

0

0

Leave a Reply