ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு… டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்!

18 April 2021, 7:24 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியில் சொதப்பல் டாம் கரணுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியி ல் இடம் பெற்றார். இதேபோல மெரிவாலாவும் அணியில் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்சேனா சேர்க்கப்பட்டார்.

அணி விவரம் :

பஞ்சாப்: கே எல் ராகும், மாயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் கூடா, நிகோலஸ் பூரன், ஷாருக் கான் , ஜெய் ரிச்சர்ட்சன், ஜலஜ் சக்சேனா, முகமது ஷமி, ரிலே மெரிடித், அர்ஸ்தீப் சிங்.

டெல்லி கேபிடல்ஸ்: பிரித்வீ ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், காகிசோ ரபாடா, அவேஷ் கான், லூக்மான் மெரிவாலா.

Views: - 93

0

0