முதலிடத்திற்கு முன்னேறிய டெல்லி…. மீண்டும் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய தவான்!

3 May 2021, 10:42 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 29லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் 29லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி கேபிடல்ஸ் அணி நம்பர் -1 இடத்தை எட்டியது. பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்நிலையில் டெல்லி அணி (12 புள்ளிகள்) நம்பர்-1 இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் (10 புள்ளிகள்), ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (10 புள்ளிகள்) 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழாவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளன.

இதேபோல அதிக ரன்கள் விளாசிய வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஷிகர் தவான் வசம் உள்ளது. இவர் 8 போட்டியில் சேர்த்து 380 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கே எல் ராகுல் (331 ரன்கள்) இரண்டாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டூபிளசி (320 ரன்கள்) மூன்றாவது இடத்திலும், டெல்லி வீரர் பிரித்வீ ஷா (308) நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் (277) 5வது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் ராயல் சாலஞச்ர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் (17 விக்கெட்) வசம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அவேஷ் கான் (14), மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் கிறிஸ் மோரிஸ் (14), மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சஹார் (11) நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரசித் கான் (10 விக்கெட்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Views: - 144

0

0

Leave a Reply