‘சார்ஜாவில் சிக்சர் மழை’ : பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி..!

Author: Udayaraman
4 October 2020, 1:53 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணி அபாரமாக ஆடி ரன்களை குவித்தது. இளம்வீரர் பிருத்வி ஷா (66), தவான் (28), ஸ்ரேயாஷ் அயர் (88), பண்ட் (38) ரன்களை குவித்தனர். இதனால், அந்த அணி 29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியும் இலக்கை நோக்கி விரட்டிச் சென்றது. ரானா (58), கில் (28) ரன்களை விளாசினர். ஒரு கட்டத்தில் மோர்கன், திரிபாதி ஆகியோர் சிக்ஸர் மழையை பொழிந்தனர். இருப்பினும், மோர்கன் (44), திரிபாதி (36) ஆட்டமிழந்ததால் டெல்லி அணியின் வெற்றி உறுதியானது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, 3-வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Views: - 44

0

0