சார்ஜாவிலும் ‘அம்பேல்’ : 46 ரன்களில் ராஜஸ்தான் அணி தோல்வி.. ! டெல்லிக்கு 5வது வெற்றி..!!

9 October 2020, 11:35 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி அணி.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி,களமிறங்கிய டெல்லி அணிக்கு பிருத்வி ஷா (19), ஸ்ரேயாஸ் ஐயர் (22), ஸ்டொயினிஸ் (39), ஹெட்மயர் (45) ஆகியோர் சிறப்பாக ரன்களை குவித்தனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ரன்கள் ஒருபக்கம் வந்து கொண்டிருந்தாலும், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தது. இது அந்த அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

தொடக்க வீரர் ஜெயிஷ்வால் (34), ஸ்மித் (24), திவேதியா (38) மட்டும் ஓரளவுக்கு ரன்களை குவிக்க, ராஜஸ்தான் அணியால் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, இந்த சீசனில் 5வது வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Views: - 55

0

0