டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…!

Author: kavin kumar
4 October 2021, 11:30 pm
Quick Share

ஐபிஎல் 2021 டி20 தொடரில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய 50-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பாண்ட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் வீரர்கள் சொப்ப ரன்களிலே விக்கெட்களை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் நிலைத்து ஆடினர். இந்த ஜோடியில் அம்பத்தி ராயுடு மிக சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதி ஓவரில் டோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 136 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து டெல்லி எணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஷிகர் தவான் தவிர மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அணியை வெற்றி பெற வைக்க போராடினார். இறுதியில், டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 28 ஹெட்மயர் ரன்னுடன் களத்தில் உள்ளார்.

Views: - 617

0

0