டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி

Author: Babu Lakshmanan
19 October 2021, 6:26 pm
srikanth kidambi win - updatenews360
Quick Share

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்றார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் கிதாம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் மோதினர். வெறும் 30 நிமிடங்களே நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிதாம்பி 21-14, 21-11 என்ற கணக்கில் சாய் பிரணீத்தை தோற்கடித்தார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன் தொடர்களில் கடைசியாக சாய் பிரணீத்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளில் கிதாம்பியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 553

0

0