தல நட்பிற்கு முன்னாடி இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல: கிங் கோலி!

23 February 2021, 10:40 pm
Dhoni Kholi - Updatenews360
Quick Share

முன்னாள் இந்திய கேப்டன் தோனியுடனான நட்பிற்கு முன் சாதனைகள் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் துவங்குகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையைத் தகர்க்க உள்ளார்.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் கேப்டனான தோனியின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்தார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையைச் சமன் செய்தார் கோலி. இந்நிலையில் இந்திய அணி ஆமதாபாத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் கோலி தலைமையில் இந்திய அணி பெறும் 22 வது டெஸ்ட் வெற்றியாக இது அமையும். இதன் மூலம் தோனியை பின்னுக்குத் தள்ளி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தார் கோலி.

இந்நிலையில் தோனியின் நட்பிற்கு முன் அவரின் சாதனையைத் தகர்த்து பெருமை பெறுவது ஒரு பெரிய விஷயமே இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி கூறுகையில், “அந்த சாதனை என்பது எனக்கு ஒன்றுமே இல்லை. சாதனைகள் என்பது தனிப்பட்ட நபரின் பார்வையில் பார்க்கப்படுவது. விளையாட்டை சாதனைகளுக்காக விளையாடக்கூடாது. பேட்ஸ்மேனாக தனிப்பட்ட சாதனையாக இருந்தாலும், கேப்டனாக வெற்றிகளைக் குவிப்பதாக இருந்தாலும் அது எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு. அதை நான் சிறப்பாகக் கொடுக்க முயற்சிக்றேன்.

இது நான் கிரிக்கெட் விளையாடும் நாள் வரை தொடரும். ஆனால் எனக்கு இது ஒரு விஷயமே இல்லை. தோனிக்கும் எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. அதன் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை நான் நன்கு அறிவேன். இந்திய அணியை முன்னிலையில் வைக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. எனக்குப் பின் இது பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கும் பொருந்தும்” என்றார்.

Views: - 12

0

0