சென்னை அணியில் உங்களின் நினைவுகளை எண்ணி பெருமைப்படுகிறீர்களா..? தோனியின் ஸ்மார்ட்டான பதில்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 9:42 am
Quick Share

அடுத்த ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவீர்களா..? என்ற கேள்விக்கு தோனி ஸ்மார்ட்டாக பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த சென்னை அணி, டூபிளசிஸின் 86 ரன்கள் குவிக்க, 20 ஓவர்களுக்கு 192 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்த போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கடந்த சீசனில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றதால், ரசிகர்கள் தோனியை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு மைக்கில் தோனி பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது ;- அடுத்த ஐபிஎல்லில் மேலும் இரு அணிகள் அறிமுகமாக விருக்கிறது. பிசிசிஐயின் முடிவை பொறுத்தே எனது ஐபிஎல் எதிர்காலம் அமையும். சென்னை அணிக்காக விளையாடுவது என்பதை விட, எது சிறந்தது என்பதை பார்க்க வேண்டும், எனக் கூறினார்.

சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா..? என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை, என்று சிரித்தபடியே கூறினார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பு வகித்த ஒரே வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

Views: - 651

0

0