ஐபிஎல் தொடருக்கு முன் தேவ்ரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ‘தல’தோனி!

27 February 2021, 9:38 pm
Quick Share

ராஞ்சியுள்ள தேவ்ரி கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியைக் காண ரசிகர்கள் குவிந்தனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன் தோனி ராஞ்சியில் உள்ள தேவ்ரி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியைக் காண ரசிகர்கள் குவிந்தனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் கேப்டன் தோனி, தற்போது தனது குடும்பத்துடன் ராஞ்சியில் நேரம் செலவிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரிலும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால் இந்தத் தொடர்களில் பங்கேற்க வில்லை என தோனி முடிவு எடுத்திருந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான பார்மில் தோனிகாணப்பட்டார். அப்படி இருந்த போது உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் எதிலும் தோனி பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். ராஞ்சியில் உள்ள தேவ்ரி கோவிலுக்குச் சென்று அம்மன் அருள் பெற்று வந்தார் தோனி. இந்த கோவிலுக்குத் தனது குழந்தைப்பருவ நண்பர்களுடன் தோனி சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனியின் வருகையை அடுத்து இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோனியின் வருகையைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் அந்த பகுதியில் குவியத் துவங்கினர்.

அவர்கள் முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் செல்பி மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது இடம் பிடித்தது. இந்நிலையில் இந்த முறை அணியைப் பலப்படுத்த கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ஏலத்தில் மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் புஜாரா உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும் அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் விதமாக மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னாவின் வருகையை அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.

Views: - 1

0

0