‘மூன்றாவது பேட்ஸ்மேனாக என் இடத்தில் தோனி ஆட வேண்டும்’- ரெய்னா வேண்டுகோள்..!

6 September 2020, 9:11 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3வது பேட்ஸ்மேனாக தோனி களம் இறங்கி விளையாட வேண்டும் என ரெய்னா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்.,19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த மாதம் 21-ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்புவதாகவும், ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய பல்வேறு கருத்துகள் வெளியானது. மேலும், ஐபிஎல் வீரர்களுடன் சென்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில், ஐபிஎல் போட்டி நடத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து ஒருவளியாக ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சூழலில், ஐபிஎல் தொடர் ஆரம்பம் ஆனது முதல் கடந்த சீசன் வரை சென்னை அணிக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி அசத்தியவர் ரெய்னா. தற்போது ஐபிஎல் 2020 தொடரில் அவர் விளையாடாததால் அவர் இடத்தில் யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு ரெய்னா தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார். தன்னுடைய அந்த பொசிஷனில் விளையாடும் வீரர் அணியில் அசாத்திய திறன் படைத்த பேட்ஸ்மேன்களால் மட்டுமே முடியும். அது பேட்டின் இன்னிங்சின் அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். அதனால் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி தான் ஆட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், 3வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் தோனிக்கு உள்ளது. 2005-ல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தோனி அந்த இடத்தில் களம் இறங்கி அபாரமாக விளையாடியதை மறக்க முடியுமா எனவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0