சலவைக்காரன் நாய் மாதிரி இருக்காதீங்க : ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களை விட்டு விளாசிய கங்கனா ரனாவத்!

4 February 2021, 10:29 pm
Quick Share

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இந்திய கிரிக்கெட் வீரர்களை கடுமையாக வசை பாடியுள்ளார்.

இந்தியாவில் தற்போது விவசாயிகள் போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டினர் உட்பட பலரும் இது குறித்து கருத்து தெரிவிக்க, இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா டிவிட்டர் பதிவை வெளியிட்டு, அதற்கு பதிலளித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவரை கடுமையான வசை பாடி உள்ளார். இங்கிட்டும் இல்லாமல் அங்கிட்டும் இல்லாமல் சலவைக்காரன் நாய் போலவும் பணக்காரன் வீட்டு கழுதைப் போலவும் செயல்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இவரின் இந்த தொடர் பதிவு சிறிது நேரத்திலே டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது பொறுப்பற்ற தன்மையுடன் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து சொல்லத் துவங்கியது முதல் இந்திய அரசுக்கு சாதகமாக இந்திய பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை பதிவு செய்ய துவங்கினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இதுபோன்ற பதிவை வெளியிட்டு உள்ளது மேலும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0