இந்த சீசனை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கும் ஜோகோவிச், நடால்!

25 January 2021, 10:41 pm
Quick Share

சர்வதேச முன்னணி டென்னிஸ் வீரர்களான நோவாக் ஜோகோவிச், ரபெல் நடால் ஆகியோர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கவுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் பிப்ரவரி 8 -21ல் நடக்கிறது. இதற்காக பல நாட்டில் இருந்து முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் மெல்போர்ன் வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான சீசனை முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயின் ரபெல் நடால் ஆகியோர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதியே துவங்கவுள்ளனர்.

இந்நிலையில் ஜோகோவிச் ஏடிபி கோப்பை தொடரில் செர்பியா அணிக்காக பங்கேற்கவுள்ளார். கடந்த முறை சாம்பியனான செர்பிய அணி குரூப் போட்டிகளில் கனடா மற்றும் ஜெர்மனி அணிகளை எதிர்கொள்கிறது. இதே போல இரண்டாவது இடம் பிடித்துள்ள ஸ்பெயின் அணிக்காக நடால் களமிறங்கவுள்ளார். இதில் குரூப் பிரிவில் ஸ்பெயின் அணி ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகளை எதிர்கொள்கிறது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவின் மூன்று நகரங்களில் இந்த ஏடிபி கோப்பை 24 அணிகளுடன் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதில் பாதி அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. இந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள 72 வீரர்கள் கூடுதலாக பயிற்சி மேற்கொள்ள போட்டி ஒரு நாளுக்கு பின் துவங்கப்படுகிறது. இந்த ஏடிபி கோப்பை தொடரில் பங்கேற்கும் ரஷ்ய அணியில் மட்டும் டாப்-10ல் உள்ள இரு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Views: - 10

0

0