தோனியை திட்டிய வார்த்தையில் பாதிக்கு அர்த்தமே தெரியவில்லை… அவ்வளவு கோவப்பட்ட டிராவிட்: சேவாக்!

11 April 2021, 2:18 pm
Quick Share

தோனியின் ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தின் போது அவர் மீது கோவப்பட்ட டிராவிட்டை தான் பார்த்ததாக முன்னாள் இந்திய துவக்க வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

தனியார் கிரெடிட் கார்டு பணம் செலுத்தும் நிறுவனத்தின் விளம்பரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் ராகுல் டிராவிட் இதுவரை இல்லாத அளவு முற்றிலும் மாறுபட்ட வகையில் கோவப்படும்படி நடித்துள்ளார். டிராவிட் கிரிக்கெட் களத்திலும் கிரிக்கெட் களத்திற்கு வெளியேயும் மிகவும் சாந்ததமாக காணப்படுவார்.

இதற்கு நேர் எதிராக இந்த விளம்பரத்தில் ஆத்திரப்படுவது போல நடித்துள்ளார். இதில் டிராபிக் ஜாமில் அதிக நேரம் சிக்கிகொண்ட டிராவிட், சுற்றியுள்ள நபர்களிடம் கோவப்படுவது போலவும், காரின் சைடு கண்ணாடியை உடைப்பது போலவும் இந்த விளம்பரம் அமைந்துள்ளது. மேலும் “இந்திராநகரின் போக்கிரி நான்” என்றும் கடைசியில் கூறுகிறார்.

இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீயைவிட் வேகமாகபரவியது. இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி மீது டிராவிட் உண்மையில் கோவமடைந்ததை தான் நேரில் பார்த்ததாகவும், அப்போது தோனியை ஆங்கிலத்தில் டிராவிட் திட்டிய வார்த்தையில் பாதியின் அர்த்தம் என்ன என்பதே தனக்கு புரியவில்லை என்றும் சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில், “நாங்கள் பாகிஸ்தான் சென்றிருந்த போது டிராவிட் கோவப்பட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தோனி அணிக்கு புதிதாக வந்த நபர். தோனி ஒரு ஷாட் அடிக்க முயற்சித்து பாயிண்ட் திசையில் நின்ற பீல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்கு தோனி மீது டிராவிட் கோவமடைந்தார். இப்படி தான் விளையாடுவதா? நீ போட்டியை முடித்து வைக்க வேண்டும். டிராவிட் வாயில் இருந்து வந்த ஆங்கில வார்த்தைகளின் வசவுகளைப்பார்த்து நான் பேக் அடித்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் அவர் திட்டிய வார்த்தையின் பாதிக்கு மேல் எனக்கு அர்த்தமே புரியவில்லை.

அடுத்த முறை தோனி பேட்டிங் செய்த போது கடந்த முறை போல தோனி எந்த ஷாட் அடிக்கவும் முயற்சிக்கவே இல்லை. அதனால் என்ன ஆனது என்று தோனியிடம் கேட்டேன். அதற்கு தோனி தான் மீண்டும் டிராவிட்டின் வசைபாடலை கேட்க விரும்பவில்லை என்றார். அதோடு தான் அமைதியாக போட்டியை முடித்துக்கொண்டு செல்ல விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்” என்றார்.

தோனி கடந்த 2005 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தில் டிராவிட் தலைமையில் சில ஆண்டுகள் தோனி விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி மற்றும் டிராவிட் ஆகியோர் மிகவும் மௌனமான வீரர்கள் என பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் இருவருமே சில நேரத்தில் தங்களின் பொறுமையை இழந்த தருணத்தை முன்னாள் வீரர்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 111

0

0